Monday, 25 January 2021

செண்டுமல்லி சாகுபடி முறை


செண்டு மல்லி பூ சாகுபடி முறை !
வீடுகளில் பூஜை அறை முதல் திருவிழா மற்றும் கல்யாண வீடுகளில் செண்டு மல்லி பூவை பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். இதன் தேவை எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கும். செண்டு மல்லி பூ எல்லா மண்ணிலும், எந்த கால நிலையிலும் மண்ணில் சாகுபடி செய்ய முடியும். இப்படிப்பட்ட செண்டு மல்லி பூவை சாகுபடி செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.
தேவையானவை: 1. விதை, 2. அசோஸ்பைரில்லம் 3. நாற்றாங்கால், 4. நீர் பாசனம், 5. ஊட்டச்சத்து மேலாண்மை. 
சாகுபடி செய்யும் முறை:  ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதையளவு தேவைப்படும். இதனை எல்லா காலநிலையிலும் சாகுபடி செய்யலாம் ஆனால் ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் நடவு செய்தால் நல்லது. 
நிலத்தை 2-3 முறை நன்கு உழுவ வேண்டும். கடைசி உழுதின் போது மக்கிய உரத்தையிட்டு நன்கு கலக்க வேண்டும்.
 நாம் எடுத்துக்கொண்ட விதைகளில் 20 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் 15 செ.மீ இடைவெளியில் விதைகளை வரிசையாக பாத்திகளில் விதைக்கவும்.
 இப்போது நாம் விதைத்த விதைகளை நன்றாக மண் கொட்டி மூட வேண்டும். பின்னர் ஒரு வாரம் ஆனதும் விதை முளைத்துவிடும். விதை முளைத்த 30 நாட்களில் நாற்றுகளை பிடுங்க வேண்டும்.
 ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தாழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடி உயரமாக இட வேண்டும்.
 செடிகளை நட்டு, 45 நாட்கள் கழித்து, 45 கிலோ தாழை உரத்தினை இட்டு செடியின் வேர் பகுதியில் மண் அணைக்க வேன்டும். செடிகளை நட்டவுடன் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் பூ பூக்கும் வரை வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
நடவு செய்த 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுகளை கிள்ளி எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூல செடி நன்றாக வளரும். 60-ம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும்.
விற்பனை செய்யும் முறை: காலை நேரத்தில் பூக்களை செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்கு பையில் அடைத்து அருகிலுள்ள கடைகள் அல்லது சந்தைகளில் விற்பனை செய்யலாம்.வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதம் மூலம் நிறைவான இலாபம் அடையலாம்.

No comments:

Post a Comment

Myilsami Annathurai was born on Monday, July 2, 1958, in the village of Kothavadi, Pollachi taluka, Coimbatore district, to Mr. Myilsami, a teacher and Mrs. Balasaraswathi.

Name: Myilsami Annathurai  Born: 02-07-1958  Parents: Myilsami, mother of Balasaraswati  Location: Pollachi, Coimbatore, Tamil Nadu ...