வீட்டிலிருந்து தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பூச்செடி வளர்ப்பு என்பது ஒர் மிகச்சிறந்த தொழிலாகும். இத்தொழிலுக்கு பெரிய முதலீடும் அவசியம் இல்லை குறைந்த செலவில் நிறைந்த லாபம் பெற முடியும். இனி பூச்செடி வளர்ப்பு பற்றியும் அதனை விற்பனை செய்யும் முறை பற்றியும் விரிவாக காண்போம்.
பூச்செடி : முதலில் பூச்செடிகளை வளர்ப்பதற்கு மண்தொட்டிகளை வாங்க வேண்டும். பண்ணை வைத்து பூக்களை வளர்க்க நினைப்பவர்கள் மண்னை நன்கு பரிசோதனை செய்து பூக்கள் வளர்க்க தொடங்க வேண்டும்.
ஒரு வேளை செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற மண்ணாக இல்லாத பட்சத்தில் அந்த நிலத்தில் செடிகள் வளர்க்க ஏற்றதாக மாற்ற தோட்டக்கலை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று நிலத்தை ஏற்றதாக மாற்ற வேண்டும்.
இவ்வகை பண்ணைகளில் ரோஜா, மல்லிகை மற்றும் செம்பருத்தி போன்ற மலர்களை அதிக அளவில் பயிரிட்டு வளர்க்கின்றனர்.
ரோஜா செடிகளை வளர்க்க எண்ணுபவர்கள் பெரும்பாலும் பதியன் முறையில்தான் உருவாக்குவார்கள். ஏனெனில் இந்த முறை மிகவும் எளிதானது ஆகும்.
தாய் செடியிலிருந்து நன்கு முதிர்ந்த கிளையை ஒடித்து மண்ணில் புதைத்து வைத்தால் சில நாட்களில் வேர் முளைத்துவிடும். பின்னர் அதை தாய் செடியிலிருந்து வெட்டி வேறோடு எடுத்து பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது மண் தொட்டிகளிலோ நட்டு வைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
இது போன்ற பதியன் முறையில் மல்லிகை, முல்லை, செம்பருத்தி போன்றவற்றை உருவாக்கி விற்பனைக்கு அனுப்பி குறைந்த செலவில் நிறைந்த லாபம் பெறலாம்.
பூக்கள் : செடிகளை மட்டும் விற்பனை செய்வது இல்லாமல் அவற்றில் வரும் பூக்களையும் விற்று அதன் மூலம் லாபம் பெற முடியும். முதலில் கொஞ்சநாள் வருமானம் இல்லாதிருந்தாலும் பூக்கள் பூக்க தொடங்கியதும் தினமும் ஒரு கணிசமான வருவாய் கிடைக்கும்.
No comments:
Post a Comment